சென்னை: பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கூடுதலாக 800 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கபடுகிறது. சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கபடுகிறது. கோவை, மதுரை, நெல்லை, போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு 400 பேருந்துகள் இயக்கபடுவதாக போக்குவரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.