பாகிஸ்தான் அதிபராக பாகிஸ்தான் மக்கள் கட்சி இணை தலைவரான ஆசிப் அலி ஜர்தாரி (68) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தலில் பாக். மக்கள் கட்சி, பாக். முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிகளின் கூட்டு வேட்பாளராக ஜர்தாரி போட்டியிட்டார். சன்னி இத்தேகாட் கவுன்சில் கட்சியின் வேட்பாளராக முகமது கான் (75) போட்டியிட்டார்.