Thursday, May 9, 2024
Home » நீலகிரி மாவட்ட திமுக., தோழமை கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம்

நீலகிரி மாவட்ட திமுக., தோழமை கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம்

by Lakshmipathi

ஊட்டி : பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க நீலகிரி மாவட்ட திமுக., தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட திமுக., செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்குமார் முன்னிலை வகித்தார்.
தேர்தல் பணி செயலாளர், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் திமுக., தலைமையிலான இண்டியா கூட்டணியின் வேட்பாளர், திமுக., துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பு அளிப்பது எனவும், மாவட்டம் முழுவதும் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்து, திமுக.,வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைத்து பணிகளையும் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மற்றும் ஊட்டி எம்எல்ஏ.,கணேஷ், சிபிஐ., மாநிலக்குழு உறுப்பினர் பௌ்ளி, மாவட்ட செயலாளர் போஜராஜன், சிபிஎம்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், மதிமுக செயற்குழு உறுப்பினர் ஆரிப் சேட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுச்செயலாளர் அனீபா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சகாதேவன்,மாவட்ட செயலாளர்கள் புவனேஸ்வரன், சுதாகர், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட செயலாளர் அபுதாகீர், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலளார் ஜாகீர் ஹாசன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் வசந்தா மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் தமீமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் திமுக., சார்பில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன்,செந்தில் ரங்கராஜ்,ராஜூ,குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சசிகுமார்,காங்கிரஸ் சார்பில் நித்யசத்யா, ரகு, நாகராஜ், உதகை ரவி, சி.பி.ஐ சார்பில் ஆரி,ரகுநாதன், சிவா, சுப்ரமணி, ஜெயகுமார், சி.பி.எம் சார்பில் வினோத், இளங்கோவன், முஸ்லிம் லீக் சார்பில் நாசர்,

முஜிபூர் ரகுமான், மதிமுக., சார்பில் ரவீந்திரன், செல்வராஜ், விசிக., சார்பில் மண்ணரசன், ராஜேந்திர பிரபு, துயில்மேகம், தீபக்குமார்,மக்கள் நீதி மய்யம் சார்பில் செல்வம், ரபீக், திராவிட தமிழர் கட்சி சார்பில் ஊட்டி சிவா,டெய்சிராணி,சிவா,அர்ஜூணன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் நூர்முகமது,சலீம்,சேக்தாவூத்,ஆசிப்,மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் பெரியார் கார்த்தி,செமீர், ஜோசப், அப்தல் மஜீத், சிஹாப், முஜீ, உசேன், மன்சூர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். முடிவில் மாவட்ட திமுக., துணை செயலாளர் ரவிகுமார் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

one × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi