ஊட்டி, நவ. 9: நீலகிரி மாவட்டத்திற்கு ‘முதல்வரின் முகவரி’ திட்ட விருது பெற்று தந்த வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். முதல்வரின் முகவரி துறையில் 2022-23ம் ஆண்டில் மிக சிறப்பாக செயல்பட்டதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை பெற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருணாவை சந்தித்து வழங்கி வாழ்த்து பெற்றனர்.
அப்போது அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த கலெக்டர், இதுபோன்று பல்வேறு விருதுகள் பெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்