ஈரோடு, நவ. 9: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பிரம்மதேசம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அந்தியூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டபோது, சவிதா என்ற பெயரில் டீ கடை நடத்தி வரும் அதேபகுதியை சேர்ந்த வினோத் என்ற சிவன் (51) என்பவர் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை வெள்ளை பேப்பரில் எழுதி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 4 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.