சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காசோலை மோசடி வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கு கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் புதிதாக சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 10ம் தேதி தொடங்கப்பட்டது. இதை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி திறந்து வைத்தார். விழாவில், சென்னை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.அல்லி, முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர் என்.கோதண்டராஜ், 4வது பெருநகர குற்றவியல் நடுவர் பி.சந்தோஷ் உள்ளிட்ட நீதிபதிகள், சைதாப்பேட்டை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர். காசோலை மோசடி வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க புதிய நீதிமன்றம் உதவிகரமாக இருக்கும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.
புதிய நீதிமன்றம் தொடக்கம்
135
previous post