சென்னை: நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல நாளை அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில், வருகிற 23.10.2023 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில், “தி.மு.கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்” காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது