வேர்க்கடலை (வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்தது) – 1½ கப்,
உலர்ந்த திராட்சை – 1/4 கப்,
முந்திரி துண்டுகளாக்கியது – 1/4 கப்,
பாதாம் தோல் நீக்கி துண்டுகளாக்கியது – 1/4 கப்,
பொட்டுக்கடலை – 1/4 கப்,
உலர்ந்த பேரீச்சை – 1/4 கப்,
துருவிய கொப்பரை – 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் – டேபிள் ஸ்பூன்,
வெல்லம் பொடித்தது – 2 கப்.
செய்முறை:
பொடித்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, கொப்பரைத் துருவல், ஏலப்பொடி, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் 2 நிமிடம் அரைக்கவும். பின் ஒரு தட்டில் அரைத்து கொட்டி பேரீச்சையை சிறு சிறு துண்டுகளாக்கி, திராட்சையுடன் அரைத்த கலவையில் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். இதுவே இயற்கை லட்டு. இந்த லட்டில் நெய், தண்ணீர் எதுவும் சேர்ப்பதில்லை. இது விரைவில் கெடாது. சத்தான லட்டு. எல்லோருக்கும் ஏற்றது.