ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய போது, சக்கரத்தில் அசோக சின்னம், இஸ்ரோ லோகோ இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 திட்டம் தொடர்பான புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. நிலவில் தரையிறங்கி பிரக்யான் ரோவர் 8 மீட்டர் தூரம் வெற்றிகரமாக பயணித்துள்ளது. லேண்டரில் இருந்து வெளியேறி பிரக்யான் ரோவர் நிலவில் கால் பதித்த காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.