
காத்மண்டு: இமயமலை அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 8,091 மீட்டர் உயரத்தில் உள்ள உலகின் 10வது உயரமான மலை சிகரமாகும். இந்தியாவைச் சேர்ந்த பல்ஜித் கவுர்(27), அர்ஜுன் வாஜ்பாய்(29) மற்றும் அனுராக் மாலிக்(34) ஆகியோர் அன்னபூர்ணா சிகரத்தில் மலையேற்றம் செய்தபோது மாயமாகினர்.
தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, பல்ஜித் கவுடர், அர்ஜுன் வாஜ்பாய் நேற்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அனுராக் மாலிக் இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இவர்களுடன் சென்ற யர்லாந்து நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் நோயல் ஹன்னாவின் சடலம் மீட்கப்பட்டது.