சென்னை: தமிழகபேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்டத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் உதயநிதி பேசினார். மேலும், அமைச்சரான பிறகு முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் பேசுவதை பார்க்க அவரது தாயார் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா உதயநிதி, மகள் தன்மயா உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் பார்வையாளர் மாடத்துக்கு வந்திருந்தனர். மேலும், அமைச்சர் உதயநிதி பதிலுரையில் பேசுகையில், இன்றைய தினம் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும், எனது மகளுக்கும் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். எனவே, எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். மேலும், சபாநாயகர் அப்பாவு தனது வாழ்த்துகளை இருவருக்கும் தெரிவித்தார்.