சேலம்: மேட்டூர் அணை நீர் மட்டம் 30 அடியாக குறைந்த நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை ஆய்வு செய்தனர். மேட்டூர் அணையின் சுவர் பகுதி, ஐந்து கண் கீழ்மட்ட மதகு, நீர்தேக்க பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 6 ஆண்டுகளுக்குப் பின் அணை நீர்மட்டம் 30 அடியாக குறைந்த நிலையில் விசைப்படகில் சென்று ஆய்வு செய்தனர்.