சென்னை: மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது; கர்நாடகத்தின் நச்சு திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. இரு மாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த கர்நாடக அமைச்சர் சதி செய்வது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.