Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி: இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். ஆந்திர மாநிலத்தின் ஒரே கட்டமாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே 13ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது.

மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளின் தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை விவரங்களில் 150 இடங்களில் தெலுங்கு தேசம் கூட்டணியும், 25இல் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்தது. இதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைத்தது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றார். அதே போன்று இன்று மாலை நடைபெறும் இந்தியா கூட்டணியில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் சந்தித்து தற்போது அரசியல் கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.