மாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பிரான்க்ஸ் வேரியண்டாக டெல்டா பிளஸ் (ஓ) என்ற காரை அறிமுகம் செய்துள்ளது.இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். துவக்க ஷோரூம் விலையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது சுமார் ரூ.8.93 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது சுமார் ரூ.9.43 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாருதி சுசூகியின் பிரான்க்ஸ் வரிசையில், டெல்டா பிளஸ் மற்றும் ஜெட்டா வேரியண்ட்களுக்கு இடைப்பட்டதாக புதிய வேரியண்ட் இருக்கும். முந்தைய மாடலை விட சுமார் ரூ.15,000 அதிகம். டெல்டா பிளஸ் (ஓ)-வில் கூடுதல் அம்சமாக 6 ஏர்பேக்குகள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி பங்ஷன் ஸ்டீரிங் வீல்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர் விண்டோ ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மாருதி பிரான்க்ஸ் டெல்டா பிளஸ்
previous post