பிஎம்டபிள்யூ நிறுவனம் 1000 எக்ஸ்ஆர் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. அன்வஞ்சர் ஸ்போர்ட் பைக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 999 சிசி இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 11000 ஆர்பிஎம்-ல் 162.26 பிஎச்பி பவரையும் , 9250 -ஆர்பிஎம்-ல் 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது. முன்புறம் டெலஸ்கோப்பிக் ஸ்போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்,கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.45 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ 1000 எக்ஸ்ஆர்
211
previous post