புதுடெல்லி: மருந்து உற்பத்தி நிறுவனமான மேன்கைண்ட் பார்மாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புகழ்பெற்ற மருந்து உற்பத்தி நிறுவனமான மேன்கைண்ட் பார்மா இந்திய பங்குச் சந்தையில் செவ்வாயன்று இந்திய பங்குச் சந்தையில் அறிமுகமாகியது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் ஆவணங்களை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது’’ என தெரிவித்தனர். கடந்த 1991ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மருந்துகள், உடல் நலன் பாதுகாப்புக்கான பொருள்களையும் தயாரிக்கிறது.