மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், 5 கதவுகள் கொண்ட தார் எஸ்யுவியை தார் அர்மதா என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார் குறித்த புதிய விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இது எப்போது சந்தைப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு மத்தியில் சந்தைப்படுத்தப்படும் என மகிந்திரா நிறுவனம் உறுதி செய்துள்ளது. நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராஜேஷ் ஜெஜூரிகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே சந்தையில் உள்ள 3 கதவுகள் கொண்ட தார் எஸ்யுவிக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதன் ஷோரூம் விலை வேரியண்ட்களுக்கு ஏற்ப சுமார் ரூ 11.25 லட்சம் முதல் ரூ 17.6 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.