டெல்லி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது