டெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே 4 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 24, ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி, அரியானா, கோவா, குஜராத் மாநிலங்களில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கோவாவில் உள்ள 2 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அரிவிக்கப்பட்டுள்ளது.