சென்னை: மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடபடவுள்ளது. 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார் . 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 17 வேட்பாளர்களை அதிமுக இன்று அறிவிக்க பட உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள், எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியதை அடுத்து புதுச்சேரி உள்பட 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முழுமையடைந்ததால் 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. திருவள்ளூர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதால் புரட்சி பாரதம் கட்சி போட்டியிடவில்லை.