Sunday, June 16, 2024
Home » ரயில்வேயில் 5696 அசிஸ்டென்ட் லோகோ பைலட்கள்

ரயில்வேயில் 5696 அசிஸ்டென்ட் லோகோ பைலட்கள்

by Porselvi

பணி: Assistant Loco Pilot (ALP). மொத்த காலியிடங்கள்: 5696.
தென்னக ரயில்வே: i) சென்னை: 148 இடங்கள் (பொது-57, எஸ்சி-33, எஸ்டி-15, ஒபிசி-29, பொருளாதார பிற்பட்டோர்-14) இவற்றில் 15 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ii) திருவனந்தபுரம்: 70 இடங்கள் (பொது-39, எஸ்சி-14,, எஸ்டி-14, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் 7 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.19,900.
வயது: 1.7.2024 தேதியின்படி பொதுப் பிரிவினர்கள் 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு ரயில்வே விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Fitter/Electrician/Instrument Mechanic/Mill Wright/Maintenance Mechanic/Electronics/ Radio & T.V. Mechanic/Wire man/Turner/Machinist/Refrigeration & Air conditioning ஆகிய ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanical/Electrical/Electronics/Automobile ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சிபிடி எனப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, ஆன்லைன் வழி அப்டிடியூட் தேர்வு (சிபிஏடி), மருத்துவ தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வில் Maths/Mental Ability/General Science/General Awareness ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் 10ம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் ஆகியவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கேள்விகள் தமிழ், ஆங்கிலம், இ்ந்தி உள்பட 13 மொழிகளில் கேட்கப்படும். இதில் ஏதாவதொரு மொழியை தேர்ந்தெடுத்து தேர்வை எழுதலாம். எழுத்துத் தேர்வில் பங்கேற்கும் எஸ்சி/எஸ்டியினருக்கு 2ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினர்/திருநங்கைகளுக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.2.2024.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi