லெக்ஸஸ் இந்தியா நிறுவனம், என்எக்ஸ் 350எச் ஓவர் டிரெய்ல் என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில், 2.5 லிட்டர் பெட்ரோல் – ஹைபிரிட் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 243 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இதன் ஷோரூம் விலை சுமார் ₹71.17 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான கருப்பு நிறுத்தில் இன்டீரியர், 17 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூப், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா, அடாஸ் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.