போபால்: மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இந்தியாவில் பிறந்த மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்துவிட்டதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக குனோ பூங்காவில் இறந்த சிறுத்தை குட்டிகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. 23ம் தேதி சிறுத்தை குட்டிகளில் ஒன்று உயிரிழந்த நிலையில் அதே நாளிலேயே மேலும் இரண்டு குட்டிகளும் இறந்துள்ளன. சிறுத்தை குட்டிகளின் இறப்புக்கான காரணத்தை பூங்கா அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.