சென்னை : தமிழர்கள் குறித்த சர்ச்சை கருத்துக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களை பற்றி சர்ச்சை கருத்து கூறியதாக தன்யா பாலகிருஷ்ணா விமர்சனத்திற்குள்ளானார். மேலும் பேசிய அவர்,”12 ஆண்டுக்கு முன் நான் பதிவிட்டதாக கூறப்படும் தகவல் – தவறானது) இது ட்ரோல் செய்பவரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை. சர்ச்சைக்குரிய கருத்து என்னுடையது இல்லை என்றாலும் துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்பந்தப்பட்டுவிட்டது. என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர் பற்றிய கருத்து : மன்னிப்பு கோரினார் நடிகை தன்யா பாலகிருஷ்ணா
304