
சென்னை: கும்மிடிப்பூண்டியில் மதுரா ராமசந்திரபுரம், ஏனாப்பாக்கத்தில் விரைவில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிபட கூறியுள்ளார். ஆரம்பாக்கத்தில் மின் பயனாளர்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து கூடுதலாக உதவி பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.