தூத்துக்குடி : குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது டிட்கோ.1,500 ஏக்கரில் ஆய்வு மையத்திற்கு அருகே தொழிற்சாலை, உந்து சக்தி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. குலசேகரன்பட்டினத்தில் 950 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் இரண்டாவது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. குலசேகரப்பட்டினம் விண்வெளி ஆய்வு மையம் அருகே 1,500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைய உள்ளதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது டிட்கோ
92