Sunday, June 2, 2024
Home » கே.எஸ்.அழகிரி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின், கார்கே நேரில் வாழ்த்து

கே.எஸ்.அழகிரி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின், கார்கே நேரில் வாழ்த்து

by Karthik Yash

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி- சாந்தியின் மகள் காஞ்சனா அழகிரிக்கும், வி.புருஷோத்தமன்- மாதவி தம்பதியரின் மகன் வினோத் ரங்கநாத் ஆகியோருக்கும் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று இரவு 7 மணிக்கு மங்களூரில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார். அவர் கார் மூலம் திருவான்மியூர் திருமண மண்டபத்துக்கு வந்தார். அதே நேரம், முதல்வர் மு.க.ஸ்டாலினும் திருமண மண்டபம் வந்தார். அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். மணமேடைக்கு வந்த அவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

திருமண வரவேற்பில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், ஏ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜி, மகேஷ் பொய்யாமொழி, சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, மேயர் பிரியா, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, எம்பிக்கள் டாக்டர் செல்லகுமார், மாணிக்கம் தாகூர், விஷ்ணு பிரசாத், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திக தலைவர் கி.வீரமணி, மமக தலைவர் ஜவாஹிருல்லா, பாமக தலைவர் அன்புமணி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினர்.

You may also like

Leave a Comment

seven + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi