சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்தடைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சற்று நேரத்தில் சந்திக்கிறார். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுக்க ஆதரவு திரட்டுகிறார். அவசர சட்ட விவகாரத்தில் பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவை கெஜ்ரிவால் கோரி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாலை 5 மணியளவில் சந்தித்து அவசர சட்டத்தை நிராகரிக்க கெஜ்ரிவால் ஆதரவு கோரவுள்ளார்.