சென்னை: முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் மருத்துவர் சத்தியநாதன் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவருமான கக்கன் அவர்களின் மகன் மருத்துவர் சத்தியநாதனின் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.