டெல்லி: மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவற்றில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளான் ஆகிய இளநிலை பட்டப்படிப்பு சேர்வதற்கான ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது. jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.