சென்னை: ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதற்கு இதுவே எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக அரசியல் நோக்கத்துடன் ஒன்றிய அரசின் அமைப்புகள் ஏவிவிடப்படுகின்றன என முதலமைச்சர் சாடியுள்ளார்.