Thursday, May 16, 2024
Home » பசுந்தேயிலை வரத்து பல மடங்கு உயர்வு: குந்தா தொழிற்சாலைகளில் தூள் உற்பத்தி தீவிரம்

பசுந்தேயிலை வரத்து பல மடங்கு உயர்வு: குந்தா தொழிற்சாலைகளில் தூள் உற்பத்தி தீவிரம்

by Neethimaan

மஞ்சூர்: மஞ்சூர் பகுதியில் தினசரி பசுந்தேயிலை வரத்து பல மடங்கு உயர்ந்ததால் தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது. இது தவிர 100க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்டுகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகளும் உள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு நவம்பரில் துவங்கி 5 மாதங்களுக்கும் மேலாக போதிய மழை பெய்யவில்லை. மேலும் பகல் நேரங்களில் சமவெளி பகுதிகளுக்கு இணையாக வெயில் சுட்டெரித்தது. இதனால் கடும் வறட்சி நிலவியது.

மழை பெய்யாததாலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்ததால் தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து பலமடங்கு குறைந்து தேயிலைதூள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. பசுந்தேயிலை வரத்து குறைந்ததால் பெரும்பாலான தொழிற்சாலைகளில் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி பரவலாக கன மழை பெய்தது. வெயிலும், மழையுமாக தேயிலை விவசாயத்திற்கு ஏற்ற காலநிலை ஏற்பட்டதால் தேயிலை மகசூல் படி,படியாக அதிகரித்தது. தற்போது மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது.

தற்போது நாளொன்றுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கிலோவிற்கும் மேலாக பசுந்தேயிலை வரத்து உள்ளது. வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைதூள் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. மேலும் பசுந்தேயிலை வரத்து தினசரி அதிகரித்து வருவதால் மஞ்சூர் உள்பட பல்வேறு தொழிற்சாலைகளிலும் விவசாயிகளிடம் இருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் இடைவெளியில் பசுந்தேயிலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதுடன் ஒரு சில ஆலைகளில் விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் கோட்டா முறை அமல் படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

17 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi