லாகூர்: பாலிவுட் நடிகை கங்கனாவை சந்தித்தால் இரண்டு முறை அறைவேன் என்று பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா கூறியுள்ளார். பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா என்பவர் வெளியிட்ட வீடியோவில், ‘பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை அறைவேன். அவர் பாகிஸ்தானை பற்றி கேவலமாக பேசி வருகிறார். பாகிஸ்தான் ராணுவம் குறித்து மிகவும் அபத்தமான கருத்துகளை கூறுகிறார். அவருக்கு அறிவே கிடையாது.
மற்ற நாட்டைப் பற்றி எதற்காக அவர் பேசுகிறார்?. உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் திரைப்படங்களைப் பாருங்கள். உங்கள் மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள்’ என்று ஆக்ரோஷமாக பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கங்கனாவின் ரசிகர்களும், அவருக்கு எதிரானவர்களும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.