ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், 2023ம் ஆண்டு மாடலாக புதிய மேம்படுத்தப்பட்ட ஹோண்டா டியோ ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில், ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் கீ சிஸ்டமும் இடம் பெற்றுள்ளது. மேலும், இதிலுள்ள 110 சிசி பிஜிஎம்-எப்ஐ இஎஸ்பி இன்ஜின், அதிகபட்சமாக 7.86 பிஎஸ் பவரையும், 9.03 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
புதிய விதிகளுக்கு ஏற்ப, இன்ஜினில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் இதில் இடம் பெற்றுள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.70,211 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுபோல் டீலக்ஸ் மாடல் சுமார் ரூ.74,212, ஸ்மார்ட் மாடல் ரூ.77,712 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.