ஹூண்டாஸ் எக்ஸ்ட்டர் கார் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெறும். இது அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதன் சிஎன்ஜி வேரியண்ட் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும் 95 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
இதில் இடம்பெற உள்ள முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை ஆங்கிலம் தவிர 10 பிராந்திய மொழிகளிலும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. இது டாடா பஞ்ச், சிட்ரான் சி3, மாருதி சுசூகி இக்னிஷ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.