ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் நிறுவனம், புதிய எஸ்பி 125 என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில், கோளாறு ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
இதிலுள்ள முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ஸ் கிளஸ்டரில், வாகனத்தின் வேகம், எரிபொருள் அளவு, தற்போதுள்ள எரிபொருளில் எவ்வளவு தூரம் வாகனம் செல்லும், எந்த கியரில் உள்ளது, சர்வீஸ் நினைவூட்டல் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.85,131 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.