கொழும்பு: இலங்கை அணி ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா டி சில்வா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2017ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஹசரங்காவுக்கு (வயது 26), டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு 2020ல் கிடைத்தது. இது வரை 4 டெஸ்டில் மட்டுமே விளையாடி உள்ள அவர் 196 ரன் (அதிகம் 59, சராசரி 28.00) மற்றும் 4 விக்கெட் எடுத்துள்ளார். இலங்கை டெஸ்ட் அணியில் அரிதாகவே வாய்ப்பு வழங்கப்படுவதால், வெளிநாடு மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளில் அதிகமாக விளையாடும் வகையில் இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹசரங்கா இதுவரை 48 ஒருநாள் போட்டியில் 832 ரன் (அதிகம் 80*, சராசரி 23.77, அரை சதம் 4) மற்றும் 67 விக்கெட் (சிறப்பு 6/24) எடுத்துள்ளார். 58 சர்வதேச டி20ல் விளையாடியுள்ள அவர் 533 ரன் (அதிகம் 71, சராசரி 14.02) மற்றும் 91 விக்கெட் (சிறப்பு 4/9) எடுத்துள்ளார்.