சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 4 நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. இந்த தொடர் விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் 24ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,665க்கும், சவரன் ரூ.45,320க்கு விற்பனையானது. 25ம் தேதி சவரனுக்கு ரூ.320 வரை குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,000க்கு விற்கப்பட்டது. 26ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.44,840க்கு விற்பனையானது. 27ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.44,800க்கு விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அப்போது தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,595க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.44,760க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.