அறிவிப்பு: ஜி 20 மாநாடு நாடு முழுவதும் 60 இடங்களில் நடத்தப்பட்டதால், இந்தியாவின் பல்முக தன்மையை உலகறிய செய்ய முடிந்தது. நடந்தது: ஜி 20 அமைப்பின் தலைமைப் பதவி சுழற்றி முறையில் இந்தியாவுக்கு வந்தது. இந்த மாநாட்டை நடத்துவதற்காக ஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.990 கோடி. ஆனால், டெல்லியில் நடந்த நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.4100 கோடி செலவிடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது எல்லாம் பிரதமர் மோடியின் தனிப்பட்ட விளம்பரத்துக்காக இந்த ஆடம்பர செலவு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.