புதுடெல்லி: கூடுதல் நீள ஸ்டேபிள் பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி முழுமையாக விலக்கப்பட்டுள்ளது. மேலும், ப்ளூ பெர்ரி, கிரான்பெர்ரி பழங்களின் மீதான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று விடத்த அறிக்கையில், ‘ப்ளூ பெர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களின் இறக்குமதிக்கான சுங்க வரி 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும், சில வகைகளுக்கு 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதே போல வான்கோழிகளின் இறைச்சி இறக்குமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் நீள ஸ்டேபிள் வகை பருத்திகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.