Thursday, February 22, 2024
Home » முழு கொள்ளளவை எட்டியது; பூண்டி ஏரியில் இருந்து 45,000 கன அடி உபரி நீர் திறப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் 8,000 கனஅடி உபரிநீர் திறப்பு

முழு கொள்ளளவை எட்டியது; பூண்டி ஏரியில் இருந்து 45,000 கன அடி உபரி நீர் திறப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் 8,000 கனஅடி உபரிநீர் திறப்பு

by MuthuKumar

சென்னை: பூண்டி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45 ஆயிரம் கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. இங்குள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 3,458 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மழைநீர் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என நீர்வரத்து தற்போது 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் நீர்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில், தற்போது 34 அடி ஆகவும், மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2,976 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டியதால், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவின் பேரில் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 45,000 கன அடி உபரி நீரானது கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியது. கனமழை பெய்து வருவதால் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 22 அடி தண்ணீர் இருந்தது. கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில், தற்போது 3050 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 12,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஏரியில் இருந்து தற்போது 8,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏரிக்கு வரும் நீர்வரத்தும் உயர்ந்து வருவதால் கூடுதல் உபரிநீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi