கொல்கத்தா: உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேற்குவங்க முன்னாள் முதல்வர், தற்போது கவலைக்கிடமாக உள்ளார். மேற்குவங்க முன்னாள் முதல்வரும், மா.கம்யூ மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு (79), கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் அலிப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.