சென்னை: வனத்துறையினருக்கு ரூ.7 கோடியில் 200 மின்சார பைக்குகள், 50 ஜீப்புகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் 34 மீட்பு, மறுவாழ்வு வாகனங்களின் சேவையையும் முதல்வர் தொடங்கி வைத்தார். காயமுற்ற வனஉயிரினங்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க புதிய வாகனங்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.