மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலத்தில் அகமதுநகர்-ஆஷ்தி பகுதிக்குச் சென்ற புறநகர் ரயிலில் அடுத்தடுத்து 5 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புறநகர் ரயில் சென்று கொண்டிருக்கும்போதே ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து 4 பெட்டிகளுக்கும் பரவியது. ரயில் பெட்டிகளில் தீ பிடித்ததை அடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கிவிடப்பட்டனர்