சென்னை: திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் வரும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து சங்க தேர்தல் அறிவித்துள்ளனர். சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.