உதகை, கொடைக்கானலுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியிடப்படுகிறது. நாளொன்றுக்கு எத்தனை வாகனங்கள், எவ்வளவு பேர் அனுமதி என்பது குறித்து நெறிமுறைகள் வெளியாகும். தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.