லண்டன்: அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச… அயர்லாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து பந்துவீச்சில் பிராடு 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 524 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. டக்கெட் 182, போப் 205, கிராவ்லி, ரூட் தலா 56 ரன் விளாசினர்.
அயர்லாந்து 2வது இன்னிங்சில் 362 ரன் குவித்து ஆல் அவுட்டானது (ஜேம்ஸ் மெக்கல்லம் காயத்தால் ஓய்வு). டெக்டர் 51, டக்கர் 44, மெக்பிரைன் 86*, மார்க் அடேர் 88 ரன் எடுத்தனர். இங்கிலாந்து அறிமுக வேகம் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து 11 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, கிராவ்லி 4 பந்தில் 3 பவுண்டரி அடிக்க… விக்கெட் இழப்பின்றி 12 ரன் எடுத்து அபாரமாக வென்றது.