Wednesday, May 15, 2024
Home » விசிக நிர்வாகி, ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகம் என சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

விசிக நிர்வாகி, ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகம் என சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

by Ranjith

சென்னை: சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முதல் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழிலதிபர் செல்வராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்தனர்.

அவர் ‘அருணாச்சலா இன்பேக்ட்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருக்க முகாந்திரம் உள்ளதாக தற்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்வராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதே போன்று, ஆழ்வார்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜூனா இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும்,வேப்பேரி, தேனாம்பேட்டை உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும், கோவையில் உள்ள கியா கார் ஷோரூம் நடத்தி வரும் அனீஸ் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறையினர், அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.

 

You may also like

Leave a Comment

2 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi