Wednesday, February 28, 2024
Home » 2023 ஆண்டு கார்களுக்கு தள்ளுபடி சலுகை அறிவிப்பு

2023 ஆண்டு கார்களுக்கு தள்ளுபடி சலுகை அறிவிப்பு

by Lavanya

* டாடா நிறுவனம் ஹாரியர், சபாரி, நெக்சான் ஆகிய கார்களுக்கு ஷோரூம் விலையில் சுமார் ₹1.25 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும். இதில் டாடா சபாரிக்கு அதிகபட்சமாக ₹1.25 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதில், விலையில் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் அடங்கும். இதுபோல் டாடா ஹாரியருக்கும் ₹1.25 லட்ம் வரை தள்ளுபடி உண்டு டாடா டியாகோ, டிகோர் ஆகிய கார்களுக்கு ₹75,000 வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகை, போனஸ் ஆகியவையும் இதில் அடங்கும். டாடா நெக்சானுக்கு அதிகப்பட்சமாக ₹60,000 வரையிலும், அல்ட்ராசுக்கு ₹45,000 வரையிலும் தள்ளுபடி சலுகை கிடைக்கும்.

* சிட்ரான் நிறுவனம், 2023ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சி3 ஏர்கிராஸ்கார்களுக்கு தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. சி3 ஏர்கிராசுக்கு ₹1.9 லட்சம் வரையிலும், சி3-க்கு ₹1.5 லட்சம் வரையிலும், சி5 ஏர்கிராசுக்கு ₹3.5 லட்சம் வரையிலும் தள்ளுபடி சலுகை கிடைக்கும்.

* ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா சிட்டி கார்களுக்கு ₹1.12 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷோரூம் விலையில் ₹25,000, எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை இதில் அடங்கும். இதுபோல், ஹோண்டா சிட்டி இ:எச்இவிக்கு அதிகபட்சம் ₹1 லட்சம் வரையிலும், அமேஸ் காருக்கு ₹92,000 வரையிலும் தள்ளுபடி சலுகை கிடைக்கும். 2023ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மேற்கண்ட கார்களுக்கு மட்டுமே இந்த சலுகை உண்டு எனவும், ஹோண்டா எலவேட் காருக்கு தள்ளுபடி சலுகை கிடையாது எனவும் நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

six + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi